Showing posts with label Chitirai Tiruvizha. Show all posts
Showing posts with label Chitirai Tiruvizha. Show all posts

Chitirai Thiruvizha




Chitirrai Thiruvizha - கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி



மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய விழாவான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்ச்சி, நேற்று காலை 7.10 மணிக்கு நடந்தது. பக்தர்கள் நேர்த்திக் கடனாக ஆட்டம், பாட்டத்துடன் சுவாமியை தரிசனம் செய்தனர். மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா ஏப்., 26ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. பட்டாபிஷேகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்திற்கு பிறகு, மே 7ல் அழகர் கோவிலில் இருந்து கள்ளழகர் மதுரை நோக்கி புறப்பட்டார்.

நேற்று முன்தினம் காலை மூன்றுமாவடியில் அவரை பக்தர்கள் எதிர்கொண்டு அழைக்கும் எதிர் சேவை நடந்தது. இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் எழுந்தருளினார். அதிகாலை திருமஞ்சனம் நடந்தது. பின், தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருள, அவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்பட்டது. அங்கிருந்து தமுக்கம் கருப்பண்ண சுவாமி கோவிலுக்கு வந்த அழகர், ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். பின், தங்கக் குதிரையில் ஒவ்வொரு மண்டகப் படிகளிலும் சென்று வந்தார்.

இதற்கிடையே அழகரை வரவேற்க, வெள்ளிக் குதிரையில் வீரராகவ பெருமாள் காலை 6.50 மணிக்கு ஆற்றுக்கு வந்தார். காலை 7.10 மணிக்கு பச்சை பட்டு உடுத்தி, "கோவிந்தா... கோவிந்தா...' என்று பக்தர்களின் கோஷங்களுக்கு இடையே வைகையாற்றில் இறங்கினார். சுற்றியிருந்த பக்தர்கள் தரிசிக்க வேண்டும் என்பதற்காக, ஆற்றுக்குள் அமைக்கப்பட்ட மண்டகப்படியை சுற்றி வந்து அருள் பாலித்தார். இதை தொடர்ந்து, வீரராகவ பெருமாள் மூன்று முறை அழகரை வலம் வந்து முதல் மரியாதை ஏற்றுக் கொண்டார். தீபாராதனைக்கு பிறகு காலை 8 மணிக்கு ராமராயர் மண்டபத்திற்கு புறப்பட்டார்.

* அங்கு மதியம் தீர்த்தவாரி உற்சவமும், அங்கப் பிரதட்சணமும் நடந்தது. இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலில் எழுந்தருளினார்.

* இன்று காலை 7 மணிக்கு சேஷ வாகனத்தில் தேனூர் மண்டபத்தில் எழுந்தருள்கிறார். பின், மதியம் 2 மணிக்கு கருட வாகனத்தில் திருமஞ்சனமாகி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்கிறார். இரவு மீண்டும் ராமராயர் மண்டபத்திற்கு திரும்பும் அழகருக்கு, 11 மணி முதல் தசாவதார நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
* நாளை இரவு ராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் திருமஞ்சனமாகி பூப்பல்லக்கில் அழகர் கோவிலுக்கு புறப்பட்டு, வரும் 14ம் தேதி காலை 10 மணிக்கு கோவிலை சென்றடைகிறார்.
Source : http://www.dinamalar.com/

To view all the photos related to Chitirrai tiruvizha , check this link :
http://www.dinamalar.com/top_album/meenakshi_Chithirai_Festival_2009/index.html

Chitirrai Thiruvizha - அழகரின் "குதிரை' ரகசியம்


அழகரின் "குதிரை' ரகசியம்: பாவ விமோசனம் தரும் சித்ரா பவுர்ணமி நன்னாளான இன்று, காலை கள்ளழகர் குதிரையில் வந்து வைகையாற்றில் இறங்கினார். குதிரையை போர்வீரர்களே அதிகம் பயன்படுத்துவார்கள். அழகரும் ஒரு போர் வீரரே! ஆம்..மானிடர்களாகிய நாம் பலவித கெட்ட குணங்களுடனும், "நான்' என்ற ஆணவ குணத்துடனும் வாழ்கிறோம். அதனால், பல பாவங்களைச் செய்கிறோம்.

நமக்குள் உறைந்து கிடக்கும் இந்த கெட்ட குணங்களுடன் போரிட்டு, பாவச்சுமையைக் குறைக்கவே அவர் குதிரை மீதேறி வந்திருக்கிறார். அவரது குதிரையின் நான்கு கால்களும் தர்மப்படி வாழ வேண்டும், வாழ்க்கையின் பொருள் உணர்ந்து வாழ வேண்டும், அதன் மூலம் இன்பம் பெற வேண்டும், பாவமற்ற வாழ்க்கை பிறப்பற்ற நிலையை நல்கும் என்ற நான்கு நிலைகளாக (அறம், பொருள், இன்பம், வீடுபேறு) உள்ளன. குதிரையின் ஒரு காது எதைக் கேட்கலாம் என்பதையும், மற்றொரு காது அதன் விளைவுகளையும் (பாவ, புண்ணியம்) குறிக்கிறது. அதன் கண்கள் எதைக் காண வேண்டும் என்பதையும், அதனால் கிடைக்கப் போகும் கண்ணுக்குத் தெரியாத பலன்களையும் தெரிவிக்கின்றன.
குதிரையின் முகம் நம் தலைவிதியைக் குறிக்கிறது. அதன் வாலுக்கு அபார சக்தி உண்டு. உடலில் ஈ மொய்த்தால், குதிரை தனது வாலை ஆட்டி எப்படி அதை விரட்டுமோ, அதுபோல, விதிப்படி நமக்கு துன்பம் ஏற்பட வேண்டும் என இருந்தால், அந்த துன்பங்களை அழகரின் தரிசனம் விரட்டி விடும் என்பதை குதிரையின் ஆடும் வால் எடுத்துரைக்கிறது. கழுத்தில் கட்டப்பட்ட சலங்கைகளும், காலில் கட்டிய சிலம்புகளும் இறைவனை மந்திர ஒலி எழுப்பி வணங்க வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. அழகர் குதிரையின் கடிவாளத்தை இறுகப் பிடித்திருக்கிறார். அதாவது, கட்டறுந்து ஓடும் மானிடப்பிறப்புகளின் செயல்பாடுகள் தன் கையில் உள்ளது என்பதை அவர் சொல்லாமல் சொல்கிறார். அவர் கையிலுள்ள சாட்டை, அவ்வாறு ஓடும் மானிடர்களுக்கு "சோதனை' என்னும் அடியைக் கொடுப்பதாக உள்ளது. குதிரையின் முதுகில் அவர் அமர்ந்துள்ளது, "அனைத்துலகும் தனக்குள் அடக்கம்' என்பதைக் காட்டுகிறது. அழகரை, இந்த ஆன்மிகக் கண்ணோட்டத்துடன் பார்ப்பவர்கள், அவர் உடுத்தியுள்ள பட்டு வஸ்திரம் போல், இவ்வுலகில் செல்வவளமும், மறு உலகில் தெய்வநிலையும் பெற்று உய்வடைவர்.

Source : http://www.dinamalar.com/

Chitirrai Thiruvizha - தேர்த்திருவிழா


தேரோடும் நம்ம சீரான மதுரையிலே: மதுரை மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவில் முத்திரை பதிக்கும் தேர்த்திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது. மீனாட்சியும், சொக்கநாதரும் தனித்தனி தேர்களில் பவனி வந்தார்கள். இந்த தேர்களை பிரம்மதேவனே சாரதியாக இருந்து செலுத்தினார்.
திரிபுரங்கள் எனப்படும் பறக்கும் கோட்டைகளை தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்களுக்கு சிவபெருமான் அவர்கள் செய்த தவபலனுக்காக வழங்கியிருந்தார். அவர்கள் அவற்றில் அமர்ந்து பறந்து, கண்ட கண்ட இடங்களில் இறங்கி தேவர்களைக் கொன்று குவித்தனர். சிவபெருமான் தேரில் விரைந்து சென்று அவர்களை அழித்தார். கொடுத்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்கள் அழிந்து போவார்கள் என்பதே தேரோட்ட தத்துவம்.
புராணங்களில் சொல்லப்படும் அசுரர்கள் என்பவர்கள் மனிதர்களிடமுள்ள ஆணவம், கன்மம் (தீயவினைகள்), மாயை (இவ்வுலக வாழ்வு நிலையானது என்று நினைத்து தவறு செய்யும் போக்கு) என்னும் மூவகை கெட்ட குணங்கள் ஆகும். இவற்றை தன் அருள்சக்தியால் அழித்து இறைவன் நமக்கு அருள்செய்கிறார். சித்திரைத் தேரோட்டம் பார்க்கச் செல்லும் அன்பர்கள், தங்களிடம் இருக்கும் இந்த மூன்று குணங்களும் முழுமையாக நீங்க பிரார்த்திக்க வேண்டும்.
மதுரையில் நாம் காணும் தேர்களை செய்தளித்த பெருமை ராணி மங்கம்மாளின் பேரனாகிய விஜயரங்க சொக்கநாத நாயக்கரையே (காலம் 1706-1732) சேரும். இத்தேர்களில் சிவபெருமானின் திருவிளையாடல் நிகழ்வுகளும், சிவமகாபுராணம் தொடர்பான சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. சுந்தரேஸ்வரர் தேரில் இடம் பெற்றுள்ள திருமால் தன் தங்கை மீனாட்சியை தாரை வார்த்து கொடுக்கும் சிற்பம் சிறப்பாக அமைந்துள்ளது. குழலூதும் கண்ணன், காளிங்க நர்த்தன கிருஷ்ணர், கஜலட்சுமி, இரண்ய சம்ஹாரம் போன்றவையும் தேர்ச்சிற்பங்களில் இடம்பெற்றுள்ளன. ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் சங்கர நாராயணர் சிற்பமும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
"ஊர் கூடித் தேர் இழுத்தது போல' என்பது சொல் வழக்கு. தேரினை தனிப்பட்ட மனிதன் இழுக்க முடியாது. ஊர் மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இழுத்தால் தானே தேர் நகரும். ஊர் மக்கள் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்னும் உயர்ந்த பண்பை நமக்கு சொல்லித்தரும் நன்னாளாக தேர்த்திருநாள் அமைந்துள்ளது.
கோயிலுக்குச் சென்று நாம் இறைவனை வழிபடுவதை விட, நம்மை இறைவனே நாடி வருவது சிறப்பு. நம்மை கடைத்தேற்றுவதற்காக அம்மை மீனாட்சியும், அப்பன் சொக்கேசனும் தேரில் திருவீதி உலா வந்தார்கள். மாசிவீதிகளில் தேர் அசைந்தாடி வரும் அழகை, வைகைத் தலைவியை வாயாரப் பாடி மனதார மகிழ்ந்து மக்கள் கண்குளிரக் கண்டு களித்தனர்.

Meenakshi Amman - Thirukalyanam


மங்கலநாண் சூடும் மதுரை மீனாட்சி: மதுரையில் மங்கல மீனாட்சி மங்கலநாண் சூடிக்கொண்ட நன்னாள் இன்று. வீட்டில் நம் பெற்றவர்களுக்கு நாம் சஷ்டியப்தபூர்த்தி நடத்திப் பார்ப்பது போல, உலகத்துக்கே தாயாக விளங்கும் நம் அன்னை மீனாட்சிக்கு, அவளது பிள்ளைகளான நாமெல்லாம் இன்று திருக்கல்யாணம் நடத்தி மகிழ்ந்தோம்.

மலையத்துவஜனின் மகளாக அவதரித்த தடாதகைப் பிராட்டிக்கு பட்டம் சூட்டினான் மன்னன். எட்டுத்திக்கும் வெற்றி நிலைநாட்ட திக்விஜயம் புறப்பட்டாள் தேவி. கயிலைநாதனைக் கண்டாள். தனக்குஉரிய மணாளன் இவரே என்று அறிந்தாள். நல்லநாளில் முகூர்த்த வேளையில் ஈரேழு பதினான்கு உலகங்களையும் ஈன்றெடுத்த அம்மைக்கும், அப்பனுக்கும்திருக்கல்யாண வைபவத்தை நிகழ்த்த மதுரையம்பதியில் எல்லா மக்களும் கூடினார்கள். மங்கல வாத்தியங்கள் முழங்க, சொக்கேசனின் கரம் பிடித்தாள்.
சக்தியில்லாமல் சிவமில்லை. சிவமில்லாமல் சக்தியில்லை. சக்தியும் சிவமும் இணைந்தால் தானே உலக இயக்கமே நடக்கிறது. இதை நமக்கு உணர்த்தவே அம்மையப்பராக இருக்கும் இறைவனுக்கும் இறைவிக்கு திருக்கல்யாண வைபவத்தை நடத்துகிறோம்.
உலக உயிர்க்குலங்கள் அனைத்தும் உமையவளின் பிள்ளைகள். ""என்ன புண்ணியம் செய்தனை நெஞ்சமே'' என்பார் மணிவாசகப்பெருமான். ஆம்! நாம் கண்கள் பெற்ற பயனை, இன்று அம்மையப்பரை திருமணக்கோலத்தில் கண்டு மகிழ்ந்ததன் மூலம் அடைந்திருக்கிறோம். அபிராமி பட்டர் தன் அந்தாதியில், ""கண்களிக்கும்படி கடம்பாடவியில் (கடம்பவனமாகிய மதுரையில்) கண்டேன்'' என்று குறிப்பிடுகிறார். இத்தலத்தில் நடைபெறும் மீனாட்சி கல்யாணத்தையே இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளதாகக் கருத வேண்டிஉள்ளது.
உமையவளுக்கு ஒவ்வொரு திருத்தலத்திலும் ஒவ்வொருவிதமான ரூப லாவண்யம் உண்டு. அதில் மதுரைக்குரிய தனிச்சிறப்பு திருமணக்கோலம் தான். திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப்பெருமாள் தாரைவார்த்துக் கொடுக்க, பெண்மைக்கே உரிய நளினமும் நாணமும் கொண்ட மீனாட்சியம்மையின் திருக் கரத்தை கம்பீரமாய் மாப்பிள்ளை மிடுக்கோடு நிற்கும், சொக்கநாதப்பெருமானின் திருக்கரத்தோடு சேர்க்கும் திருமணக்கோலம் உலகப்பிரசித்தம். மதுரைக்கரசி மணக்கோலம் காணும் நன்னாள் என்பதால் திருப்பூட்டும் நல்ல நேரத்தில் அவரவர் வீடுகளில் பெண்கள் எல்லோரும் திருமாங்கல்யச்சரடு மாற்றிக் கொள்வது தொன்று தொட்டு வருகின்ற மரபாகும். எல்லோராலும் கோயிலுக்குள் நுழைந்து மணக்கோலம் காண்பதென்பது நடக்கிற ஒன்றா! இதற்காகவே, புதுமாப்பிள்ளை சுந்தரேசர் இன்று இரவு யானை வாகனத்திலும், அம்பாள் பூப்பல்லக்கிலும் மாசிவீதிகளில் வலம் வந்து அருள் செய்வார்கள். நாம் நெரிசல் இல்லாமல் நமக்கு நாமே கட்டுப்பாடு விதித்துக் கொண்டு அவர்களை வணங்கி மகிழ்வோமே.

Chitirrai Thiruvizha - Yethir Sevai


எதிர்சேவை என்றால் என்ன: கள்ளழகர் இன்று நம்மைக் காண வருகிறார், நமக்கு அருளை வாரி வழங்க வைகை நோக்கி வருகிறார். அவரை நாம் வரவேற்க இருக்கிறோம். சர்க்கரை நிரப்பிய செம்பில் தீபமேற்றி, "எங்களுக்கு இனிய வாழ்வைக் கொடு' என கேட்கப்போகிறோம்.

"சேவை' என்றால், "இதோ! வருகிறாரே பகவான், அவருக்கு தூபம் காட்டுவதும், தீபம் காட்டுவதும் மட்டுமே சேவை என்று நினைக்கிறோம். நிஜத்தில், நாம் அவருக்கு சேவை செய்யப்போவதில்லை. நமக்கு சேவை செய்வதற்காக அவர் மதுரைக்கு வந்திருக்கிறார். அவர் சாதாரண சேவைகளையா செய்திருக்கிறார்! கஜேந்திரன் என்னும் யானை முதலையிடம் சிக்கிக் கொண்டது.

"ஆதிமூலமே' என ஓலமிட்டது. பகவான் கருடன் மீது பறந்து வந்தார் அந்த யானைக்கு சேவை செய்ய! ""என் தந்தை உன்னை மறுக்கிறார். நீ இருப்பது நிஜமானால், உடனே எழுந்தருள் இந்த தூணில்'' என்று கேட்டான் பிரகலாதன். தூணைப் பிளந்து கொண்டு நரசிம்மராக அவர் வெளிப்பட்டார் அந்த சிறுவனுக்கு சேவை செய்ய. ""ஐயோ! என்னை மானபங்கம் செய்கிறார்களே! கிருஷ்ணா ஓடி வா'' என அபயக்குரல் கொடுத்தாள் திரவுபதி. பகவான் ஓடோடி வந்தா992;் அந்த அபலைக்கு பணியாற்ற! இப்போதும் கூட எதற்கு வருகிறார்? தவளையாக மாறி விட்ட மண்டூக முனிவருக்கு மீண்டும் சுய உருவை வழங்க! இப்படிப்பட்ட கருணை மிக்க அவரது சேவைகளின் அளவை மதிப்பிட முடியுமா! அவரது சேவையின் முன் நமது சேவை எம்மாத்திரம்? சரி...அவர் எப்படி வருகிறார்?

கள்ளராக வேடமிட்டு வருகிறார்! நம் உள்ளங்களைக் கொள்ளையடிக்க இப்படி ஒரு உன்னத வடிவம்! பக்தர்களிடம் ஒளிந்திருக்கும் பக்தி என்னும் வெண்ணெயைத் திருடித்தின்பதில் தானே அவருக்கு அலாதிப் பிரியம். அந்த நாயகர் இன்று காலை மூன்றுமாவடியிலும், தொடர்ந்து வைகை வடக்கிலுள்ள முக்கிய பகுதிகளிலும் சேவை சாதித்து விட்டு, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலை வந்தடைவார். நாளை புனித நதியாம் வைகையில் எழுந்து அருள்வார்.

வைகை நதி இன்று பாழ்பட்டு கிடக்கிறது. இந்நதி, புராண காலத்தில் நாம் கேள்விப்பட்டது போல மீண்டும் மாற வேண்டும். ஆண்டு முழுவதும் தண்ணீர் பெருகி ஓட வேண்டும். நதி சுத்தமாக வேண்டும். அவர் மனம் வைத்தால் இந்த சேவையை கணப்பொழுதில் நமக்கு செய்து தந்து விடுவார். அனைவர் நலம் கருதி,அழகரிடம் நம் ஒட்டு மொத்த பிரார்த்தனை இதுவாகவே இருக்கட்டும்

Chitirrai Thiruvizha - Day 10


காணக் கிடைக்காத காட்சி இன்று மட்டுமே: மீனாட்சியம்மன் சித்திரை திருவிழாவின் கடைசி நாளான இன்று, நமது அன்னை மீனாட்சியும், தந்தை சுந்தரேஸ்வரரும் வெள்ளி ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர்.

சித்திரை திருவிழாவில் ரிஷபத்திற்கு மட்டும் இரண்டு நாள் இறைவனைச் சுமக்கும் பாக்கியம் கிடைக்கிறது. ஆறாம் திருவிழாவிலும் ரிஷபமே பவனி வந்தது. எதைத் தவற விட்டாலும், ரிஷப வாகன தரிசனத்தை மட்டும் விடவே கூடாது. ஆறாம் திருநாளில் தவற விட்டவர்கள் இன்று அவசியம் தரிசித்து விடுங்கள். அந்தளவுக்கு புண்ணியமான தரிசனம் இது.

ரிஷபம் என்னும் காளை தர்மத்தின் சின்னமாகும். இதன் கட்டான உடல் நமக்கு திட மனது வேண்டும் என்பதையும், கால்கள், எவ்வளவு சுமை இருந்தாலும் அதைத் தாங்கும் தன்னம்பிக்கை வேண்டும் என்பதையும், காதுகள் இறைவனின் திருநாமத்தை மட்டுமே கேட்க வேண்டும் என்பதையும், கண்கள் நல்லதையே பார்க்க வேண்டும் என்பதையும், ஆடும் வால், தீயவற்றை ஒதுக்க வேண்டும் என்பதையும், கழுத்தில் கட்டப்பட்ட கிண்கிணி மணிகள், இறைவனை மந்திரம் சொல்லி வழிபடுவதையும் குறிக்கின்றன.

ரிஷபத்தை "அற விடை' என்பர். "அறம்' என்றால் "தானதர்மம்' மட்டுமல்ல. தர்மம் தவறாமல் வாழ வேண்டும் என்பதையும் குறிக்கிறது. தர்மம் தவறாமல் வாழ்பவரே புண்ணியத்தை அடைவதற்கு தகுதியு டையவர். அதனால் தான் தர்மமே இறைவனை சுமந்து வருவதாகச் சொல்வர். மற்ற தரிசனங்கள் எல்லாருக்கும் கிடைக்கும். ஆனால், ரிஷப தரிசனம் மட்டும் ஏதோ ஒரு பிறவியில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே கிடைக்கும். ரிஷப வாகனத்தில் பவனிவரும் சுவாமியை தரிசித்தால், இவ்வுலகில் என் னென்ன தான தர்மங்கள் உண்டோ, அத்தனையும் செய்த புண்ணியமும் கிடைக்கும்.
இந்த புண்ணியத்தை, தனது அடியார்களுக்கு வழங்குவதற்காகவே சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளுகின்றனர். இந்த அரிய சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக்கூடாது. மீனாட்சியம்மைக்கு வைகையின் தென்கரையில் விழா எடுத்து அவளது அருளைப் பெற்று மகிழ்ந்த நாம், சுந்தரராஜப் பெருமாளாகிய அழகரை எதிர்கொண்டு அழைக்க நாளை வடகரைக்குச் செல்வோம்.

Chitirrai Thiruvizha - Day 9


உலகையே வென்றாள்; உவகை கொண்டாள்: மங்கல ஒலி முழங்க, நல்லோர் வாழ்த்த, வேதமந்திரங்கள் முழங்க, தடாதகைப்பிராட்டிக்கு மணிமுடி சூட்டி மகிழ்ந்தான் மலையத்துவஜ பாண்டியன். அந்தப் பெண்ணரசியின் ஆட்சியில் பாண்டிய நாட்டு மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். கன்னிப்பெண் நல்லாட்சி செய்ததால் பாண்டியநாடு "கன்னிநாடு' என்று சிறப்பு பெற்றது. அந்த வீரத்தலைவி எட்டுத்திக்கிலும் படையெடுத்துச் சென்று பூமண்டலம் முழுவதையும் வென்று வெற்றிக்கொடி நாட்ட புறப்பட்டாள் தடாதகை என்னும் பெயர் கொண்ட அன்னை மீனாட்சி.

அமைச்சர் சுமதி மற்றும் மந்திரி பிரதானிகள் போருக்கு ஆயத்தமாயினர். பேரிகைகள் முழங்கியது, தாரை தப்பட்டை ஆர்ப்பரித்தது. இடி முழங்கியது போல் சங்க நாதம் ஒலித்தது. தடாதகைப்பிராட்டியார் வில், அம்பு, கத்தி, கேடயம் ஏந்தி போர்க்கோலம் பூண்டாள். தென்னகம் முதல் வடபுலம் வரை வெற்றிக்கொடி நாட்டினாள். பூவுலகத்தை தன் வசமாக்கிய தேவி, தேவலோகத்துக்கும் சென்றாள். அங்கும் வெற்றியே. இறுதியில் பிராட்டியார், சிவபெருமான் அரசாளும் கயிலைமலையையே சென்றடைந்தாள். கயிலாயம் முழுவதும் போர் முழக்கம் ஒலித்தது. எங்கும் சங்கநாதம் முழங்க கேட்ட காவலர்கள் நந்திதேவரிடம் பாண்டிய நாட்டு பெண்ணரசி தடாதகைப்பிராட்டியார் படையெடுத்து வந்த செய்தியைத் தெரிவித்தனர். நந்திதேவர் அனுப்பிய சிவகணங்கள் படைகள் யாவும் பிராட்டியாரின் படையினர் முன்னர் தோற்று நின்றனர்.
பின்னர் சிவபெருமான் தன் மலர் வாயால் புன்னகை புரிந்து,""நானே வருகிறேன்; அப்பெண்ணரசியை வெல்கிறேன்,'' என்று போருக்குப் புறப்பட்டார். போரில் யாருக்கும் சளைக்காத தடாதகைப்பிராட்டியார் இறைவனின் செழுங்கடைக்கண் கண்ட அந்த கணமே பெண்மைக்கே உரிய நாணத்தால் புளகாங்கிதம் அடைந்தாள். அவள் பிறந்த போது மூன்று தனங்களுடன் வித்தியாசமாக பிறந்தாள். அதில் ஒன்று எந்த ஆடவன் முன்பு மறைகிறதோ, அவரே அவளுக்கு கணவன் என்பது ஏற்கனவே அறிந்த செய்தி. அப்போது அவளது ஒரு தனம் மறையவே, நாணம் கொண்டாள். அன்னையை வீரத்தால் ஜெயிக்க வந்தவர் காதலால் ஜெயித்தார். பரம்பொருளான சிவனே தன் மணாளன் என்பதை உணர்ந்தாள் தடாதகைப் பிராட்டியார். எட்டுத் திக்கும் வெல்ல திக்விஜயம் புறப்பட்ட பிராட்டியார் சிவ பரம்பொருளையே தன் மணாளனாக அடைந்தாள். ஒன்பதாம் திருவிழாவான இன்று, இந்த திக்விஜய அலங்காரத்தில், மதுரை மீனாட்சி மாசிவீதிகளில் உலா வருவாள்.

Chitirrai Thiruvizha - Day 8 - Meenakshi amman Pattabhishekkam


வாடகை என்ன தர வேண்டும்: நானே உலகத்தின் அதிபதி என்ற முறையில், இன்று அன்னை மீனாட்சி பட்டம் சூடிக்கொள்கிறாள். அதனால் தான் இன்று சுவாமியும், அன்னையும் இன்று வெள்ளி சிம்மாசன வாகனத்தில் பவனி வருகின்றனர். அவளுக்கு மட்டும் தான் சிம்மாசனம் இருக்கிறதா? அவள் தன் குடிமக்களும் நன்றாக இருக்க வேண்டுமே என்பதற்காக, சூரியன், சந்திரன், நதி, கடல் என சகல வசதிகளையும் கொண்ட விலை மதிப்பு மிக்க உலகத்தையும் தந்திருக்கிறாள். ஆனால், என்ன தான் இருந்தாலும் சும்மா தருவாளா? ஒருவரது இடத்தில் நாம் தங்கினால் அதற்கு வாடகை கொடுத்தாக வேண்டுமே! அதுபோல் அவளும் நம்மிடம் வாடகை எதிர்பார்க்கிறாள். அந்த வாடகை எவ்வளவு என்பதை நமக்கு தெரிய வைப்பதே எட்டாம் திருவிழா. இறைவனுக்கு எட்டு வகை குணங்கள் உண்டு. அந்த எட்டு குணங்களும் நம்மிடமும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான். அவை என்னென்ன?

முற்றும் உணர்தல்: நாம் யார், நமக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது, இங்கேயே தங்க வேண்டும் என்று நினைக்கிறாமே! இது நியாயமா என்று உணர்வது. வரம்பில் இன்பமுடைமை: நமக்கென ஆண்டவன் இவ்வளவு ஆயுள், இவ்வளவு வசதி வாய்ப்பு என நிர்ணயித்துள்ளான். அந்தக் காலத்தையும், வசதியையும் வரம்பு மீறிய செயல்களுக்கு பயன்படுத்தாமல் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்துதல். பாசத்தை விட்டு நீங்குதல்: நாம் குடும்பத்திற்கு வேண்டிய பணிவிடையைச் செய்ய வேண்டும். ஆனால், அவர்கள் நன்றி மறந்தாலோ, பிரிந்து சென்றாலோ, நாமே பிரிய வேண்டிய நிலை வந்தாலோ, அந்த உறுப்பினர்களில் ஒருவரை இழக்க வேண்டி வந்தாலோ வருத்தப்படாத தன்மை.

முடிவில் ஆற்றல் உடைமை: எடுத்த முடிவில் விடாப்பிடியாக இருந்து சாதித்தல். தன் வசப்படுதல்: மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐந்து உறுப்புகளும் நமக்கு வசப்பட்டு இருத்தல். பேரருள் உடைமை: பிறர் மீது அன்பு செலுத்துதல். இயற்கை உணர்வுடைமை: என்ன நடந்தாலும் "இது உலக இயற்கை தானே' என்று எளிதாக எடுத்துக் கொள்ளுதல்.
தூய உடம்புடையனாதல்: இவ்வுலக வாழ்வு உனக்குச் சொந்தம் என்ற மாய எண்ணத்தை விட்டு இறைவனால் தரப்பட்ட இவ்வுடலை மீண்டும் அவனிடமே சேர்க்க வேண்டும் என உணருதல். இந்த எட்டு குணங்களும் நம்மில் அநேகரிடம் இல்லை. ஏன்...இதுபற்றி சிந்தித்துக் கூட பார்த்ததில்லை. ""எங்களிடம் இந்த குணங்களே இல்லை. எனவே, உனக்கு பலநாள் வாடகை பாக்கி வைத்துள்ளோம். இந்த எட்டு குணங்களையும் எங்களுக்கு தந்து உன் வாடகையை கழித்துக்கொள்,'' என இந்நாளில் தாய் மீனாட்சியிடமும், தந்தை சுந்தரேஸ்வரரிடமும் கேட்க வேண்டும்.

Chitirrai Thiruvizha - Day 7


ஏழ்பிறப்பும் இணையும் ஒரே சொந்தம்: "ஏழேழு பிறவியிலும் நாம் இணைந்திருப் போம்' என்று அன்புமிக்க கணவனும் மனைவியும் பேசிக் கொள்வார்கள். ஆனால், இது நடக்கப் போகிறதா என்றால் நிச்சயமாக இல்லை. நம் மதுரைத் தாய் மீனாட்சியைப் பெற்ற அன்னை காஞ்சனமாலைக்கே இந்த கொடுப் பினை இல்லையே! அவள் முற்பிறப்பில் கந்தர்வக்கன்னியாக இருந்தாள். மறுபிறப்பில் மானிட ஜென்மம் எடுத்து மலையத்துவஜனின் மனைவியானாள். ஆனால், ஏழுபிறப்பிலும் ஒரே ஒரு சொந்தம் மட்டுமே தொடரும். அது தான் அன்னை மீனாட்சிக்கும் நமக்கும் உள்ள தொடர்பு. இது பிரிக்க முடியாத பந்தமாக இருக்கிறது.
இந்த பந்தம் நிரந்தரமாக வேண்டுமென்றால் பிறவிகளை அறுத்தெறிந்து விட்டால், நாம் மீனாட்சியுடனும், சுந்தரேஸ்வரருடனும் இரண்டறக் கலந்து விடலாம். நமக்கு ஏழு பிறப்புகள் மட்டுமல்ல, ஏழு வகை பிறவிகளும் ஏற்படுகின்றன. அவரவர் செய்த தீவினை, நல்வினைக்கேற்ப தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, தாவரம் என ஏதோ ஒன்றாகப் பிறக்கிறோம். இந்த ஏழுவகை பிறவியுமே தொல்லை தருவது தான். தாவரமாய் பிறந்தால் தண்ணீரின்றி தவிக்க வேண்டி வரும் அல்லது வெள்ளத்தில் மூழ்க வேண்டியிருக்கும்! பூச்சியாகப் பிறந்தால் பிறர் காலில் மிதிபட்டு அவஸ்தைப்பட வேண்டியிருக்கும்! தேவராகப் பிறந்தால் அசுரர்களால் அல்லல்பட வேண்டியிருக்கும்! எனவே இறைவனிடம், ""ஆண்டவா! ஏழாம் திருநாளான இன்று ஏழுவகை பிறவியுமே எனக்கு வேண்டாம். பிறவித் துன்பத்தில் இருந்து விடுதலை கொடு. அதுவரை எங்களைச் செல்வச்செழிப்புடன் வாழ வை,'' என்று பிரார்த்திக்க வேண்டும். இன்று அன்னை மீனாட்சி யாளி வாகனத்திலும், சுந்தரேஸ் வரர் நந்திகேஸ்வரர் வாகனத்திலும் பவனி வருகிறார்கள்.

Chitirrai Thiruvizha - Day 6


நல்ல பாதை காட்டும் ஆறாம் திருவிழா: இன்று அம்பாளும் சுவாமியும் ரிஷப வாகனத்தில் பவனி வருகின்றனர். ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்பாள் வருவதை தரிசிப்பது பெரும் புண்ணியத்தை தரும். இதற்கு ஈடு இணையே கிடையாது.

சில மந்திரங்களை உச்சரிக்க வேண்டுமானால் "நீங்கள் சிவதீட்சை பெற்றுவிட்டீர்களா' என கேட்பது வழக்கம். தீட்சை பெற வேண்டுமானால், சில விதிமுறைகள் உண்டு. அந்த முறைகளைப் பின்பற்றி பன்னிரு திருமுறைகளிலும் (தேவாரம், பெரியபுராணம் உள்ளிட்ட நூல்கள்) தெளிந்த நல்லறிவு பெற்றவர்கள் தீட்சை பெறுவர். ஆனால், எந்தத் தகுதியும் இல்லாதவர்களுக்கு இறைவன் தானாகவே முன்வந்து தீட்சை அளிக்கிறான். அதற்காக, அவன் வாகனமேறி பவனி வருகிறான். தன்னைக் காண வரும் பக்தர்கள் அனைவருக்கும் அவன் தீட்சை தருகிறான். இதற்கு "சாம்பவி தீட்சை' என்று பெயர்.

"சாம்பவி தீட்சை ' என்றால் இறைவன் தன் ஞானக்கண்ணால் மனிதனையும் பிற உயிர்களையும் சுத்தப்படுத்துவதாகும். இது உடல் சுத்தமல்ல. உள்ளச்சுத்தம். ஒவ்வொருவர் உள்ளமும் சுத்தமானால் உலகமே சுத்தமாகிறது. அப்படியானால், நம் உள்ளத்தில் ஏதோ அழுக்கு படிந்திருந்திருக்கிறது என்று அர்த்தமாகிறது.
நம் உள்ளத்தில் காமம் (விருப்பம்), குரோதம் (பழிவாங்கும் உணர்வு), உலோபம் (கஞ்சத்தனம் அல்லது சுயநலம்), மோகம்( மண், பெண், பொன் உள்ளிட்ட பேராசை), மதம் (ஆணவம்), மாச்சரியம் (பொறாமை) என ஆறுவகையான அழுக்குகள் படிந்துள்ளன. ஆறாம் திருநாளன்று ரிஷபத்தில் பவனி வரும் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும் இந்த ஆறுவகை குணங்களையும் நம் உள்ளத்தில் இருந்து விரட்டி நம்மை நல்வழிப்படுத்துவார்கள். இந்த கொடிய அழுக்குகள் நம் உள்ளத்தில் இருந்து நிரந்தரமாக விலக அவர்களை இன்று வேண்டுவோம்.
(Have asked one of my friend to translate all the passage in english ...whenever she finishes will update it here. )

Chitirrai Thiruvizha - Day 5



ஐந்தாம் திருநாள் கொண்டாட்டம்: இன்று சித்திரை திருவிழாவின் ஐந்தாம் நாள். மதுரையின் தாய் மீனாட்சியும், தந்தை சுந்தரேஸ்வரரும் குதிரை வாகனத்தில் பவனி வருகின்றனர்.
இன்றைய தினம் அவர்களிடம் நமது வேண்டுகோள் என்னவாக இருக்க வேண்டும் என தெரிந்து கொள் வோம். மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகள் மனிதனை ஆட்டுவிக்கின் றன. அதாவது, உடல் இன்பத்தை தேடி அலைகிறது. வாய் என்னென் னவோ பேசுகிறது, எதை எதையோ சாப்பிடுகிறது. கண்கள் பார்க்கக் கூடாத அனைத்தையும் பார்க்கிறது. மூக்கு தேவையற்ற வாசனைகளை நுகரத்துடிக்கிறது. செவி கண்ட கண்ட இசையையும், தேவையற்ற பேச்சுகளையும் கேட்கிறது. இந்த புலன்களெல்லாம் தவறான பாதையில் செல்வதால், மனம் அலைபாய்கிறது. எனவே, நமது ஐம்புலன்களையும் கட்டுப்படுத்தி நமது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும் என மீனாட்சி தாயிடம் கேட்க வேண்டும்.
""உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல் தெள்ளத் தெளிந்தார்க்கு ஜீவன் சிவலிங்கம் கள்ளப்புலனைந்தும் காலா மணிவிளக்கே'' என்று திருமூலர் திருமந்திரத்தில் சொல்கிறார். "" நாம் நமது ஐம்புலன்களையும் ஒழுங்குபடுத்தி வாழும்போது, அவை செய்யும் கள்ளத்தனமான செயல்கள் அனைத்தும் நீங்கி, மனிதன் ஒளிவிளக்காக திகழ்கிறான். அப்படிப்பட்ட நிலையில் அவனுடைய ஜீவனே சிவலிங்கமாகி விடுகிறது,''என்பது இந்தப் பாடலின் பொருள்.
இதை சூசகமாகக் காட்டத்தான் மற்ற நாட்களில் வெவ்வேறு வாகனங்களில் வரும் சுவாமியும், அம்பாளும் இன்று குதிரை வாகனத்தில் வருகின்றனர். (ஒரே வாகன சிறப்பு ரிஷபத்துக்கும் உண்டு) குதிரையை அடக்க கடிவாளம் இருப் பது போல, உங்கள் மனங்களையும் கடிவாளம் போட்டுக் கட்டுப்படுத்துங்கள் என்று அவர்கள் இந்த வாகனத்தின் மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள். நமக்கு இறைவனால் தரப்பட்ட உறுப்புகள் நல்லதை மட்டுமே செய்ய சுவாமியிடமும், அம்பாளிடமும் வரம் வேண்டுவோம்.

Today is the 5th day of "CHITTIRAI THIRUVIZHA". Madurai's God was 'Sundareshwarar' and Goddess 'Meenakshi'. They both come in their vehicle which was "The Horse". Today we will come to know about what we should pray to them. Human beings are controlled by the five sense of Organs such as body, mouth, eye, nose, and ears. Our body was searching for lust, mouth was talking and eating unnecessary things, eyes were seeing bad things, nose were smelling unwantedthings, ears were hearing bad things.. Though these organs are travelling in the wrong path. Our soul was not in a steady way. Therefore, we should pray to Goddess Meenakshi that she should help us to control all these things and they should come into our control. "Our heart and body is the great temple; our mouth is the way; Shivalingam was the soul of Good people". These were the words of 'Thirumoolar' in his 'Thirumandiram'. When we are living by controlling our soul, our bad things were going out of us and we were like Great Shrine.At that time his soul was acting as Shivalingam. These were the meanings of the words of Thirumoolar. To resemble this, only on this festival day, God and Goddess come in their horse vehicle, on the other day, they come in diffrent vehicles. On coming in their horse vehicles, they are saying that horses are having control in the Blind Fold. Like that, we should also control our soul and lead a peaceful life. "Our body's part are God's Gift and we should use them in the right way". These were the blessings we should ask God and Goddess.

(Thanks to Yamuna for translating this passage )

Chitirrai Thiruvizha - Day 4


நான்கையும் மறந்து விடுவோமே: ""வாழ்க்கை என்றால் நாலும் நடக்கத்தான் செய்யும், அதையெல்லாம் பார்த்தால் முடியுமா? நடப்பதெல்லாம் நன்மைக்கே என நினைத்துக் கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டியது தான்,'' என சாதாரணமாக ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறோம். நிஜமும் அது தான். வாழ்க்கையில் அப்படி என்ன நான்கும் நடக்கும் என்கிறார்கள் என்று ஆராய வேண்டும்.
நம்முடைய வாழ்க்கை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு கருவிகளால் (கரணம்) இயக்கப் படுகிறது. கரணம் என்ற சொல் லுக்கு விருப்பம் என்ற பொருளும் உண்டு. மனம் விரும்பியபடி புத்தி செல்லும். புத்தி சித்தத்தை மாற்றும். தான் என்ற அகங்காரத்தைத் தோற்றுவித்து நம்மை அழிவுக்கு இழுத்துச் செல்லும். எனவே மனம், புத்தி ஆகியவை நல்ல முறையில் இயங்கி, சித்தம் போக்கு சிவன் போக்காக இருக்க (கடவுளையே நினைக்க வேண்டும்) பிரார்த்திக்க வேண்டும். சிவசிந்தனையில் மனம் சென்றால் அகங்காரம் நீங்கி விடும்.
மனிதனாக மட்டுமின்றி புழு, பூச்சிகளாக கூட இழிநிலையான பிறவிகள் ஏற்படுகின்றன. அந்தப் பிறவிகள், வியர்வை, கிழங்கு, விதை, கருப்பை ஆகிய நான்கு வழிகளில் உண்டாகின்றன. எந்த வழியில் பிறந்தாலும் துன்பத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும். மண் புழுவாகப் பிறந்து நிலத்துக்கு நன்மையே செய்தாலும் கூட, விவசாயியின் மண் வெட்டிக்கு இரண்டு துண்டாகி அவஸ்தைப் பட வேண்டும். எனவே, இந்த நான்கு வகைபிறவியிலும் இருந்து விடுதலை கேட்க வேண்டும். நான்காம் திருநாள் உணர்த்தும் தத்துவம் இதுவே. இன்று மதுரையின் மாதரசி அன்னை மீனாட்சியும், சுந்தரேஸ் வரரும் தங்கப் பல்லக்கு வாகனத்தில் உலா வருகிறார்கள்.

There goes a say "We will have to face ups and downs in life.Also every happening is for some good reason."And most of the time its true.
Our Life is driven by our Mind and its intellectual thought, Body, overconfidence.We cogitate as we wish,and react as we cogitateThis paves way to over confidence wish may lead a person to the path of destruction.We can adapt ourself to spiritual path and seek the help of eternal power to be always constructive.Every living being suffers in their own way.Though an earth worm serves their best as natural manure,sometimes its hit by gardening tools. So we pray to God to getrid of these sorrows.

(Thanks to sasi , for translating )
Source : www.dinamalar.com

Chitirrai Thiruvizha - Day 3


மூன்றாம் நாள் திருவிழா நடத்துவது ஏன்:
நமது வினைகளை (செயல்கள்) மூன்றாகப் பிரிக்கலாம். ஆன்மிகத் தில், இது, சஞ்சித வினை, பிராரத்துவ வினை, ஆகாமிய வினை என்பர். சஞ்சிதம் என்றால் நாம் இதுவரை பிறந்த பிறவிகளில் செய்த நற்செயல் மற்றும் தீயசெயல்களின் தொகுப்பாகும். பிராரத்துவம் என்பது சஞ்சிதத் தொகுப்பில் இருந்து இந்தப் பிறவிக்கென இறைவன் எடுத்துக் கொடுத்த ஒரு பகுதி. ஆகாமியம் என்பது, இப்போது நாம் புதிதாகச் செய்யும் நற்செயல் மற்றும் தீயசெயல்களின் சேர்க்கையாகும். நல்லது செய்தால் தேவர் முதலான பிறப்புகளை அடைய வேண்டி வரும்.
தேவராக இருந்தாலும் அசுரர்களால் துன்பத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். கெட்டது செய்தால் இந்த பூமியில் மீண்டும் கேவலமான பிறப்பைச் சந்தித்து இன்னும் துன்பப்பட வேண்டியிருக்கும். எனவே இவ்வகையான மூன்று செயல்களின் பலன்களில் இருந்தும் விடுதலை வேண்டும் என அன்னை மீனாட்சியிடமும், சுந்தரேஸ்வரரிடமும் பிரார்த்திக்க வேண்டும். ஐயம், விபரீதம், மயக்கம் என மூவகை புத்தி மனிதனுக்கு உண்டு. சந்தேகப்பட்டால் விபரீதம் நிகழும். இதனால் அறிவு மயங்கி தவறான முடிவுக்கு வரும். இந்த ஆபத்தான போக்கில் இருந்து புத்தியை நல்வழியில் திருப்பும்படி இறைவனிடம் கேட்க வேண்டும். சாந்தம், மிருககுணம், சோம்பல் என குணங்கள் மூவகைப்படும். பின் இரண்டு குணங்களும் ஆபத்தைத் தரும் என்பது அனைவரும் அறிந்தது தான்! அதிகமாக சாந்தமாக இருப்பதும் உயிருக்கு ஆபத்தே. எனவே, இந்த குணங்களை விடுத்து, இறைவனை அடைய வேண்டும் என்ற ஒரே குணம் மட்டும் போது மென மீனாட்சியிடம் கேட்க வேண்டும்.
முற்பிறப்பு, இப்பிறப்பு , வரும் பிறப்பு ஆகிய பிறப்புகளில் இருந்தும், மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்னும் மூன்று ஆசைகளில் இருந் தும் விடுபட வேண்டும் என்ற ஞானத்தைக் கேட்க வேண்டும். மூன்றாம் திருநாள் உணர்த்தும் தத்துவம் இதுவே. இன்று அன்னை மீனாட்சி காமதேனு வாகனத்திலும், சுவாமி கைலாசபர்வத வாகனத்திலும் வருகின்றனர். காமதேனு எதைக் கேட்டாலும் கொடுப்பது. மேற்கண்ட மூவகை துன்பங்களும் அகல வேண்டும் என்று அம்பாளிடம் கேட்டால் நிச்சயமாய் அந்த வரத்தை அருள்வாள்.

Significance of the third day festival:
Basically our deeds are classified into three as sanjitham, prithuva and aagamiya.Sanjitham comprises of the good and bad deeds of our till date births.Prathuvam is a section of the sanjitham, dedicated by god the almighty for our current birth. The newly added good and bad deeds of this birth is termed and framed as Agaamiyam. When performed a good deed, the fate is destined to reach the birth of Devas. Though being a Devas, one has to meet the Asuras. When a bad deed is performed, then one gets destined to end with a worst lifetime, one that is much more filled with obstacles than the previous births. So inorder to escape from the consequences of your good and bad deeds,one has to be devoted to Goddess meenakshi and Lord Sundarareshwar. Every human has the three characters, Doubt, Disaster and Infatuation. When one tends to doubt, it results in disaster, which leads to a bad decision. To lead a life away from such happening, one has to plead to god wholeheartedly. Human Character can be classified into three types as Softness, Brutality and Lazyness. Its a known fact that the last two characters always tend to lead to danger in life. Even being extra soft is dangerous for life. So one should pray to Goddess Meenakshi for a life with no such characters and for only that which is filled with thirst to reach god. One should pray to get away from the deeds of our past, current and future births and also for the knowledge which frees us from desire for land, money and women. This is the teaching of the third day festival. Today goddess meenakshi and Swami Kailasar comes on kamathaenu and parvatha vagana respectively. Kamadenu is known for blessing what we ask for. So if we ask to get freed from the three types of sufferings, Goddess Meenakshi will surely bless us with the same.
(This article was published in dinamalar Paper and the same was translated by Kavitha )
source : http://www.dinamalar.com/

Chitirrai Thiruvizha - Day 2

இரண்டாம் திருவிழாவின் மகத்துவம்: நமது உடலை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று ஸ்தூல உடம்பு. அதாவது, நம் கண்ணுக்குத் தெரியும் உடல். மற்றொன்று சூட்சும உடம்பு. இது கண்ணுக்குத் தெரியாத நுட்பமான உடல். சூட்சும உடம்பு எட்டுத்தத்துவங்களால் ஆனது. அதாவது மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய உறுப்புகளால் உணரப்படும் தொடு உணர்வு, சுவை, பார்வை, மணம், ஓசை என்னும் உணர்ச்சிகளையும், மனம், புத்தி, அகங்காரம் என்னும் குணங்களையும் உள்ளடக்கியது.
நாம் பிறக்கிறோம், இறக்கிறோம், மீண்டும் பிறக்கிறோம். இந்தப் பிறவிக்கு முந்திய நிலையில் நமது உயிரானது (ஆன்மா) பார்வையற்றவனைப் போல எங்கு செல்வதென தெரியாமல் அல்லல்படுகிறது. பார்வையற்றவனுக்கு ஊன்றுகோல் பயன்படுவது போல, உயிருக்கு இறைவன் சூட்சும உடம்பையும், ஸ்தூல உடம்பையும் கொடுத்து உலகில் நடமாட அனுமதிக்கிறார். இந்த இரண்டு உடல்களையும் இறைவன் கொடுத்ததன் நோக்கம், நம்மை யாரென்று அறிந்து கொள்வதற்காக மட்டுமே. ஆனால், நாம் இதை உண்மை உடல்களாகவும், நிரந்தரமானது என்றும் நினைத்து இந்த உலக வாழ்வில் இன்பங்களை நுகர்ந்தபடியே உழலுகிறோம்.
இந்த இரண்டு உடல்களுமே உண்மையல்ல என்பதை உணர்ந்து, இன்று பவனி வரும் இறைவனிடம், ""இறைவா! இந்த இரண்டு உடல்களுமே எனக்கு வேண்டாம். சிவமாகிய நீயே நிஜம். இந்த உடல்களை விடுத்து, உன்னை வந்தடைய வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இனியும் பிறவித்துன்பத்தை தராதே,'' என பிரார்த்திக்க வேண்டும். இரண்டு உடல்களையும் விட்டு இறைவனுடன் ஒன்ற வேண்டும் என்பதையே இரண்டாம் திருவிழா உணர்த்துகிறது. இன்று அன்னை மீனாட்சி அன்ன வாகனத்திலும், சுவாமி பூத வாகனத்திலும் எழுந்தருளுகின்றனர்.




You can divide our body in to two.The real physical body which we can see and the one which cannot be seen thru eyes.The unreal body is made of eight tatvas - The human body, mouth, eyes, nose,ears -the five senses associated with it are touch, taste, vision, smell, sound. The other three tatvas are mind,brain and pride. We are born, we die and we are reborn.Before this birth,the atma wanders like a blind man. It is God who gives the real physical body and the senses .He is the one who makes all of us live in this world.This is like giving a stick to the blind man.The reason why God gives us the body and the senses is to realise who we are.But we think this is going to stay forever and jus keep enjoying the wordly pleasures. We need to realise that everything is unreal.Lets surrender to Lord Shiva and say "You are the truth.We want to liberate from this body and reach you."Liberating ourselves from both the real and unreal bodies is denoted by the second festival.This day you can witness Godess Meenakshi on Anna Vahanam and Shiva on Bhootha Vahanam.


Source : www.dinamalar.com

Chitirrai Thiruvizha - Day 1


கொடியேற்ற தத்துவம்:
கோயில்களில் பிரம்மோற்ஸவம் துவங்கும்போது, முதல் நாள் கொடியேற்றப்படும். எதற்காக கொடியேற்றுகிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?

கொடிமரம் என்பது இறைவனாகிய சிவபெருமானைக் குறிக்கும். கொடிக்கயிறு சக்தியைக் குறிக்கும். உயரே செல்லும் கொடிச்சீலை உயிர்களைக் (மனிதர்கள் உள்ளிட்ட உயிரினங்கள்) குறிக்கும். மனிதர்களாகிய நாம் கடவுளை அடைவது என்பது எளிதான செயல் அல்ல. ஆனால், நம்மை அவரிடம் கொண்டு சேர்க்க சக்திதேவி உதவுவாள். அவளிடம் போய் நாம் அழுதுவிட்டால் போதும். பிள்ளைகளின் கண்ணீரைத் தாய் பொறுக்கமாட்டாள். அவள் நம்மை இறைவனிடம் கொண்டு சேர்த்து விடுவாள்.
ஒரு வீட்டில், பிள்ளைகள் தங்களுக்கு ஏதாவது வேண்டுமென்றால், தந்தையிடம் போகமாட்டார்கள். அம்மாவிடம் சொல்லி, அதைக் கேட்டு பெற்றுக் கொள்வார்கள். அதே போன்றது தான் இறைவனை அடையும் நிலையும்!

என்னதான் நாம் இறைவனோடு ஒன்றியிருந்தாலும் அல்லது தியானத்தில் ஆழ்ந்திருந்தாலும், நம் மனம் அலைபாய்வது இயல்பு தான். அப்படி அலைபாயும் மனது எங்காவது சுற்றிவிட்டு, மீண்டும் இறைவனையே வந்து சேரும். இதைத்தான் "கொடித் தடை' என்பார்கள். கொடியேறியபிறகு வெளியூருக்குச் சென்றாலும் இரவுக்குள் ஊர் திரும்புவது வழக்கமாக உள்ளது.
சிவபெருமானை ஐந்தெழுத்து மந்திரமான "சிவாயநம' என்று சொல்லி வணங்குகிறோம். "சி' என்பது சிவபெருமானையும், "வ' என்பது அம்பாளையும், "ய' என்பது கொடியில் வரையப்பட்ட நந்திதேவரையும், "ந' என்பது கொடிச்சீலையையும், "ம' என்பது தர்ப்பைக்கயிறையும் குறிக்கும்.
கொடிமரத்தின் அடியில் தர்ப்பைக்கயிறு இருக்கும். இந்தக் கயிறை பாசத்துக்கு ஒப்பிடுவார்கள். மனைவி, மக்கள், உறவு, பொருட்கள் ஆகியவற்றின் மீது கொண்ட பாசம் தான் நம்மை இறைவனை அடையவிடாமல் தடுக்கிறது. இந்த பாசப்பிணைப்பில் இருந்து விடுபட்டு இறைவனை அடைய வேண்டும் என்பதால் தான் தர்ப்பையை கயிறுபோல் சுருட்டி கீழே வைத்திருப்பார்கள்.
ஏப்ரல் 26,2009, காலை 10.30 - 10.54 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது.
During Brahmotsavam in temples , the flag is hoisted on the first day. Do yo know its significance? The Dwaja stamba (Kodimaram ) denotes Lord Shiva. The rope (Kodi Kayaru) denotes Goddess Shakthidevi . The flag which is taken to the top denotes all living creatures including human beings . Its not easy to attain the feet of the Almighty. But goddess shakthidevi , helps us in reaching HIM. We jUST have to express our wish to HER. She will surely help us reaching the feet of the god. Just imagine...If we need anything ,the first person to approach is our mother.She gets it done for us from our father.The same way is for attaining the god's feet . We might be thinking about God.Or we might be in our meditation.Still our mind wanders. The wandering mind , will definitely come back to the thots about God. This is called as flag barrier (kodi thadai). Once the flag is hoisted in temple during the festival times , people who go out of station , should come back on the same night . That's is the reason , even now in villages during festival times people will not go out of stations. Lord shiva is worshipped by his five letter mantra "Shivayanama" . 'Shi " denotes Sivan , "Va " denotes Sakthi "Ya" denotes The Nandi deva in dwajastambha "Na" denotes the idols in dwaja stambha "ma" denotes the bundle of darbhai (grass) At the lower end of the dwaja stambha , a bundle of darbhai is tied . It is compared to " love and affection ". The Love and affection which we have for our Friends and family ,prevent us from reaching god. We have to break the barriers and raech God.That's the reason a bundle of darbhai is kept in the lower part of the dwajastambha. On 26th April 2009 , between 10.30 - 10.54 AM. the flag hoisting ceremony took place at Madurai Meenakshi amman temple

Source : www.Dinamalar.com
Related Posts Plugin for WordPress, Blogger...