This information is collected from Dinamalar Paper :
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தைப்பூசத்திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி அவரது பெயர் சிறப்பைத் தெரிந்து கொள்வோம்.
இடும்பன் என்பவன் அகத்தியரின் உத்தரவுப்படி தென் பொதிகைக்கு சக்திகிரி, சிவகிரி என்ற இருமலைகளை கொண்டு சென்றான். வழியில் பாரம் தாங்க முடியாமல், இத்தலத்தில் மலைகளைக் கீழே வைத்து விட்டான். திருஆவினன்குடியில் இருந்த முருகன், அம்பிகையின் அம்சமான சக்திகிரி மீது ஏறி நின்றார்.
தான் கொண்டு வந்த மலை மீது ஏறி நின்று, தன்னை போகவிடாமல் தடுத்த முருகனை இடும்பன் எதிர்த்தான். அவன்மீது தன் அருட் பார்வையை செலுத்தி, ஆட்கொண்டார் முருகன். மலையில் நின்ற இவர் கையில் தண்டம் வைத்திருந்ததால், "தண்டாயுதபாணி' என்று பெயர் பெற்றார். தண்டம் என்றால் கோல் என்றும், அபராதம் என்றும் பொருள்கள் உண்டு. "இவ்வுலக வாழ்வு நிலையற்றது' என்னும் ஞானபாடத்தை கற்பிக்கும் ஆசிரியராக முருகன் இத்தலத்தில் அருளுகிறார். ஆசிரியரின் கையில் கோல் இருக்கிறது. அதைக் கொண்டு பயமுறுத்தி, மாணவர்களை ஒழுக்க வழிக்கு திருப்புவார்.
முருகன் என்ற ஞான ஆசிரியனும், தன் கையிலுள்ள கோலால், உலக இன்பங் களான மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்னும் மாயைகளில் மூழ்கித் தவிக்கும் மக்களை, ஆசைகளைத் துறந்து, தன்னைப் போல் ஆண்டிகோலத்திற்கு அழைக்கிறார். மறுப்பவர்களுக்கு "சோதனைகள்' என்னும் அபராதம் விதிக்கிறார். அச்சோதனைகளை தாங்க முடியாதவர்கள், அவரது வழிக்கே சென்று விடுகின்றனர்.